தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரைச் சந்தித்தார் மு.க ஸ்டாலின்
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
நடத்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைவரும் இணைந்து மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவைக்குழு தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது 133 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.




வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
