காணாமல் போன உறவுகளை தேடி தேடியே உயிர் போகும் காணாமல் போன உறவுகள் விவகாரம்!
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தாலும் அவர்களின் உறவுகளுக்கான நீதி இன்றை வரைக்கும் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிலை நாட்டப்படவில்லை.
உறவுகளை தேடி தேடி போராடியே உயிரை மாய்க்கின்றனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார அரசாங்கமும் இதனைதான் செய்து வருகிறது. உள்ளக பொறி முறை ஊடான தீர்வின்றிய நிலையில் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் மறுதளித்து வருகின்றது.
இது இவ்வாறு இருக்க வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்ன என்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாக போராடிய மற்றுமொரு தாய் பதில் தெரியாமல் உயிரிழந்துள்ளார்.
3000 - நாள் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கண்டு பிடிக்க சுமார் 3000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த மாரியம்மா என அழைக்கப்படும் வேலு சாமி மாரி தனது 79 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (27.02.2025) காலமானார்.
வவுனியா தோணிக் கல்லை சேர்ந்த குறித்த தாயின் புதல்வரான வேலு சாமி சிவகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி கட்ட போரில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிய போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெப்ரவரி 2017 முதல் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தெற்காசியாவில் மிக நீண்ட போராட்டமாக கருதப்படுகிறது.
இது குறித்து திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செபஸ்டியன் தேவி கருத்து தெரிவிக்கையில், "இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கையாக கடத்தப்பட்டு காணாமல் போன எங்கள் உறவுகளை தாருங்கள் என்ற கோரிக்கை மாத்திரம் தான்.
நிதி தேவையில்லை எங்களுக்கு நீதி தான் வேண்டும். 16 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடி வருகிறோம். தற்போதைய நிலையில் வவுனியாவில் ஒரு அப்பாவி தாய் 3000 நாள் கடந்த நிலையில் போராட்டத்தின் போது காலமானார்.
இதற்கான நீதியை தேடியே அரசாங்கத்திடம் பல முறை முறையிட்டோம் நீதியில்லாத நிலையில் தொடர்ச்சியாக சுமார் 16 வருடங்களாக போராடி வருகின்றோம். உண்மைத் தன்மையும் நீதியான விசாரனையும் தேவை. இதனை அரசாங்கம் மறுப்பதால் தான் சர்வதேசத்திடம் நீதியை கேட்கிறோம். உண்மையை கண்டறிந்து குற்றம் செய்தவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
தமிழன் என்பதற்காக எங்கள் பிள்ளைகளை கடத்தி சென்று விட்டார்கள். எனது மகனை 2008.08.09 மதியம் 3.00 மணிக்கு திருகோணமலை 22ஆம் படைப் பிரிவின் இராணுவ முகாமின் அருகாமையில் வேலை செய்து கொண்டிருந்தவரை இராணுவம் கடத்தி சென்றது. இன்றை வரைக்கும் தீர்வில்லை. மகனை தேடி தருவதாக சொன்னவர்களை நம்பி எனது காணியை விற்று பத்து இலட்சம் ரூபா வரை செலவு செய்துள்ளேன். இது போன்று பலரிடம் இருந்து பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்கள்.
உள்ளக பொறி முறை
பிள்ளைகள் உயிருடன் வருவார்கள் என நம்பி போராட்டங்கள் நடாத்திய சுமார் 310 உறவினர்கள் உயிரிழந்துள்ளார்கள். பல ஏக்கத்துடனும் கவலைகளுடனும் வாழ்ந்து வரும் நிலையில் அரசின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மீதும் நம்பிக்கை இல்லை எங்களுக்கு நீதிதான் வேண்டும். வடகிழக்கில் எட்டு மாவட்டங்களில் போராட்டத்தை நடாத்தி வருகிறோம்.
பல பேரணிகளை நடாத்தினோம். தீர்வுகளை காணவில்லை. உள்ளக பொறி முறை ஊடான நீதியை நிலை நாட்ட அரசு முன்வர வேண்டும். எனவே தான் உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்போம்" என தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கம் வடகிழக்கில் தமிழ் மக்களை ஏமாற்றியே அரசியல் செய்கிறார்கள். இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் 27.02.2025 அன்று நடந்த வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் போது இவ்வாறு தெரிவித்தார் "குற்றவியல் நீதி தொடர்பில் ஜெனிவாவில் எதையும் வெளி விவகார அமைச்சர் கூறவில்லை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை வலுவானதாகவும் மற்றும் போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் ஆராயப்படும் என ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
ஆனாலும் குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையும் கூறவில்லை 77 வருடங்களாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு முன்னைய ஆட்சியாளர்கள் செய்ததை போன்றே அநுர குமார அரசாங்கமும் செய்து வருகின்றது" என்றார் இவ்வாறான போராட்டங்கள் மூலமாக பல தாய்மார்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
மனித உரிமைகள் தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தினங்களை கரி நாளாக கொண்டாட வேண்டிய நிலைக்கும் ஆளாகியுள்ளனர். புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் கூட அவர்களது உரிமைகளை கேள்விக்குறியாக்கி பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு உட்பட்ட நிலையில் விசாரணைகளை முன்வைக்கவும் முயற்சிக்கின்றனர்.
இது குறித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் "அடிக்கடி எங்கள் வீட்டுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் தேடி தேடி வருவார்கள் என் அம்மாவிடமும் எங்களிடமும் விசாரனை செய்து விட்டு செல்வார்கள் சுட்டு விட்டு செல்வோம். ஆனால் உங்களை பார்க்கும் போது பாவமாக உள்ளது. என்றார்கள்" என தனது மூன்று சகோதரர்களை இழந்து தவிக்கும் தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரி வயது (54) தெரிவித்தார்.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தற்போது தவிக்கின்றனர். இது தொடர்பில் தனது சகோதரனை (கந்தசாமி முரளிதரன்) இழந்த சகோதரி இவ்வாறு காணாமல் போனமை தொடர்பில் மேலும் கூறியதாவது "எனது சகோதரன் 2008.05.05ஆம் திகதியன்று சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை தேடிப் பார்த்தோம்.
இழந்த உறவுகள்
மூன்றாம் நாள் சைக்கிள் மாத்திரம் பட்டிமேட்டில் கிடந்தது அதன் பிறகு சிஐடியினர் வீட்டுக்கு வந்து உடுப்பு கேட்டார்கள் வழங்கினோம். தொலைபேசியில் மாத்திரம் உரையாடுவார் எங்கிருந்து கதைப்பதாக சொல்ல மாட்டார்.
9ஆம் மாதமளவில் மூன்று மாதங்கள் தொலைபேசியில் பேசியவர் அழைப்பு மூன்று மாதங்களின் பின்வரவில்லை. இது விடயமாக ஜனாதிபதி செயலகம், பொலிஸார் இடத்தில் முறைப்பாடு செய்தோம்.
மனித உரிமைகள் ஆணைக்குழு ஐசீஆர்சி போன்றவற்றிலும் முறையிட்டோம். சகோதர் திரும்பி வரவில்லை. போகம்பரை சிறையில் இருப்பதாக அறிந்து 2016.09ஆம் மாதம் அங்கு சென்றோம். வெளிக்கடை சிறைச்சாலைக்கு அழைத் சென்றுள்ளதாக சொன்னார்கள். அங்கு தொலைபேசி அழைப்பு எடுக்க மீண்டும் போகம்பறை சிறைச்சாலைக்கு என்றார்கள்.
அங்கு சென்று விசாரிக்க தூக்கு கைது என்றார்கள். இறுதியில் ஏமாந்து விட்டோம். எங்களுக்கு உயிர்தான் முக்கியம். பணம் தேவையில்லை. தேடித் தாருங்கள்" எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் இரு சகோதர்கள் 1990,1991களில் வன்னி, கோயிலடியில் வைத்தும் கடத்தப்பட்டு காணாமல் போனதாகவும் கூறினார். பல்வேறு பொருளாதார கஷ்டங்களுடன் கணவனை இழந்த நிலையில் இக்குடும்பங்களில் பலர் பிரதான குடும்ப தலைவர்களை இழந்து விதவைகளாக வாழ்கின்றனர்.
இலங்கையில் நீதிப் பொறி முறை ஒன்றை அநுர அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் சிறந்த தீர்வை உள்ளக பொறி முறை ஊடாக காணமுடியும். இல்லாத பட்சத்தில் சர்வதேச சமூகத்திடம் நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வுறவுகள் உள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 03 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
