காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு (Photos)

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Kanamirtha May 31, 2022 12:07 PM GMT
Report

காணாமல் போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் காப்பகத்திலிருந்து குறித்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மதியம் 2.30 மணியிலிருந்து காணாமல் சென்றிருப்பதாகப் பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்திருந்தனர்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை 

குறித்த காப்பகத்தில் ஒரு வருடமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த இச்சிறுமி பலரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காகத் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு (Photos) | Missing Girl Rescued By Kalmunai Police 24 Hours

மேலும் இச்சம்பவத்தில் காணாமல் சென்றவர் நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார்.

இந்நிலையில் குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29)பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடீரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாகப் பாடசாலை காப்பாளர் தெரிவித்ததை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தேடுதலானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ.ஜனகீதன் பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

சிறுமி வழங்கிய வாக்குமூலம் 

காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு (Photos) | Missing Girl Rescued By Kalmunai Police 24 Hours

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி நேற்று இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு (Photos) | Missing Girl Rescued By Kalmunai Police 24 Hours

காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு (Photos) | Missing Girl Rescued By Kalmunai Police 24 Hours

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US