யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம்(05.06.2026) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கடற்றொழிலாளர்கள் மீட்பு
அவர்களை தேடும் பணிகள் நேற்றைய தினம்(06.06.2026) முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சரின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடற்தொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்று(07) பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மீட்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri