சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் (VIDEO)
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
பொருட்களின் விலை உயர்வை நிறுத்த முடியாது என்ற போதும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிப்பது தொடர்பிலும் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு கலவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் அந்த நாடுகளில் பதிவாகவில்லை எனவும் அமைச்சர் ஒருவர் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்த வாயுக்கலவை மாற்றத்தால் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
