ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க் கொடி
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து பீ.பி. ஜயசுந்தரவை (P.B.Jayasundara) நீக்குமாறு கோரிக்கை விடுக்க அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது, அமைச்சர்கள் சமல் ராஜபக்ச மற்றும் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதியின் செயலாளரை கடுமையாக விமர்சித்த பின்னர், அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் சிலர், அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான பின்னணியில், தான் ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலக போவதாக ஜயசுந்தர அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்ச, ஜயசுந்தரவை கடுமையாக விமர்சித்திருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் சில ஆலோசனைகள் காரணமாகவே நாட்டில் பொருளாதார ரீதியான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது ஆளும் கட்சியில் உள்ள சிலரது நிலைப்பாடாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பீ.பி. ஜயசுந்தரவை, அமைச்சர் விமல் வீரவங்ச, பொருளாதார கொலைகாரன் எனக் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri