2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
தகவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நிதியமைச்சு தரப்புகளின் தகவல்
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு தரப்புகள் தெரிவித்திருந்தன.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. எனினும் உரிய திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நிதி அமைச்சகத்தின் உள்ளீடுகளை பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு சட்டம் 2022க்கான திருத்த வரவை சட்ட வரைவாளர் தற்போது உருவாக்குகிறார் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு |