சரத் வீரசேகர தொடர்பில் ஆதாரத்துடன் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா! (VIDEO)

Police Monk Sarath fonseka SarathWeerasekara Ladiya
By Steephen Dec 09, 2021 11:24 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath fonseka), நாடாளுமன்றத்தில் இன்று புகைப்படம் ஒன்றை காண்பித்து, அதில் இருக்கும் நபர் குறித்து விபரங்களை முன்வைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருக்கும் பாதாள உலகக்குழுவை சேர்ந்த லடியா என்பவரின் சகோதரருடன் அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பிரபல பௌத்த பிக்கு ஒருவரும் அந்த புகைப்படத்தில் இருப்பதாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அவையில் என்னை பற்றி பேசி எனக்கு எதிராக பெரிய சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. என் மீது சேறுபூசிய அந்த நபரை சமூக வலைத்தளங்களில் பீச்சங் வீரசேகர என்றே கூறுகின்றனர்.


அவருக்கு நான் சிறிய பதில் ஒன்றை வழங்க வேண்டும். கைது செய்யப்படும் நபர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக நான் பேசினேன். அப்போது சரத் வீரசேகர டிங்கரின் லசந்த என்பவர் பற்றி கூறினார். அப்படியான நபரின் பெயரை கூட நான் தெரிவித்திருக்கவில்லை.

அந்த மனுஷனை பற்றி எனக்கு தெரியவும் தெரியாது. கைது செய்யப்படுபவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்தும் நடக்கின்றது, அது மிக கூடாத நடவடிக்கை, மிலேச்சத்தனமான செயல் என்று நான் சொன்னேன்.

சரத் வீரசேகரவுக்கு மூளையில் பிரச்சினையோ தெரியாது, டிங்கரின் லசந்த என்பவருடன் என்னை தொடர்புப்படுத்தி இந்த இடத்தில் துள்ளி குதித்தார். எனக்கு அந்த நபரை தனிப்பட்ட ரீதியில் தெரியாது.

சரத் வீரசேகர போன்று நான், பாதாள உலகக்குழுவினர், கடத்தல் காரர்களிடம் பணத்தை பெற்று கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவன் அல்ல. இங்கு இரண்டு புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பாருங்கள்.

இந்த புகைப்படத்தில் சரத் வீரசேகர, லடியா என்ற கடத்தல்காரன், ஐஸ் போதைப் பொருளை நாட்டுக்கு கடத்தி வரும், அந்த நபரின் தம்பி இருக்கின்றார். லடியா நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

லடியாவின் தம்பியும் லடியாவின் நண்பர் ஒருவர் இந்த புகைப்படத்தில் இருக்கின்றனர். இவர்களுடன் புகைப்படத்தில் இருக்கும் சரத் வீரசேகர என்ற நபர், நான் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறுகிறார்.

இந்த இடத்தில் போதனை செய்யும் பௌத்த பிக்கு ஒருவரும் இருக்கின்றார், கௌரவ அமைச்சர் அவர்களே. இதுதான் அந்த புகைப்படம். இந்த பிக்கு சம்பந்தமாகவே தற்போது குரல் பதிவுகள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த பிக்கு போதனை வழங்குகிறார். வெளியாகியுள்ள குரல் பதிவுகளில் உள்ளது போன்ற போதனைகளை வழங்குகிறாரோ தெரியவில்லை. அப்படியானால், அமைச்சர் சரத் வீரசேகர லடியா என்பவரின் தம்பியுடன் அந்த இடத்தில் ஏதோ ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார்.

இதனால், நாங்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவதில்லை. அவரையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கோருகிறேன். அவரது பதவிக்கு இது பொருத்தமற்றது.

அத்துடன் சன்சைன் சுத்தாவை கொலை செய்ததன் காரணமாகவே டிங்கரின் லந்தவை கொன்றதாக சரத் வீரசேகர கூறியிருந்தார். அப்படியானால், சன்சைன் சுத்தா என்பவர் சரத் வீரசேகரவின் நண்பராக இருக்க வேண்டும்.

சரத் வீரசேகர பாதாள உலகத்தின் ஒரு தரப்பினருடன் நெருங்கி, மற்றுமொரு தரப்பினரை கொலை செய்கின்றார் என்றே புரிகிறது. இவற்றை மறைத்து செய்ய முடியாது. வேடம் பூண்டாலும் வெட்ட வெளியிலேயே ஆட வேண்டும்.

அவரது பொலிஸாரை முதுகெலும்பில்லாதவர் என்று கூற வேண்டாம் என வீரசேகர கூறுகிறார். நான் முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறவில்லை. வீரசேகரவுக்கு தவறியுள்ளது.

அவரது பொலிஸ் என்கிறார். பொலிஸ் எப்படி அவருடையதாகும். மூடி வளர்த்த ஒருவர் பொலிஸ் திணைக்களத்தில் இருக்கின்றார். அவர் வீரசேகரவின் நபர். ஏனைய பொலிஸார் அவருக்குரியவர்கள் அல்ல.

பொலிஸார் அனைவரையும் நான் முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறவில்லை. எனினும் வீரசேகரவை மகிழ்விக்க கொலை செய்பவர்களை முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூற நான் அச்சப்படவில்லை.

முதுகெலும்பில்லாதவர்களே மிலேச்சத்தனமான வேலைகளை செய்வார்கள். இதற்கு தலைமை தாங்கும் வீரசேகர முதுகெலும்பில்லாதவர்களில் உச்சத்தில் இருப்பவர் என்று நான் கூற நேரிடும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

சரத் வீரசேகர தொடர்பில் ஆதாரத்துடன் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா! (VIDEO) | Minister Poses With Underworld Fonseka


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US