ஷசீந்திர ராஜபக்சவுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஷசீந்திர ராஜபக்சவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்த போல ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் அமைச்சர்
நீர்வழங்கல் அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியது போல ஷசீந்திர ராஜபக்சவும் வழங்குவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கு சுத்தமான – சுகாதார பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும்.
அந்த இலக்கை அடைவதற்கு எமது அமைச்சு துரிதமாக செயற்பட்டு வருகின்றது எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
