11 கிராமங்களுக்கான களுகுன்னாமடு பிரதான வீதி புனரமைக்கப்பட்டு அமைச்சரால் திறந்து வைப்பு
'மறுமலர்ச்சிக்கான வழி' கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காப்பட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட 11 கிராமங்களுக்கான களுகுன்னாமடு வீதி நேற்று(23.05) திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
42 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் காப்பட் இடப்பட்டு இவ்வீதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வீதியின் ஊடாக 11 கிராம மக்கள் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
யுத்தக் காலம் தொடக்கம் இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தமையினால், இதில் பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இது குறித்து கவனம் செலுத்தி, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதியை விரைவாக காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளர் சுதர்ஷன சாமர வீரகோன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குரூஸ் உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.



குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan