உள்நாட்டு பால்மாவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பால்மா பொதிகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பால்மா விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் அதிகளவில் பசும்பாலை கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியொன்று 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இதனடிப்படையில் அதனை 600 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை, பெல்வத்தை தவிர்ந்த ஏனைய உள்நாட்டு பால்மா பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அதனை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு
எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் உள்ளூர் பால் மா உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
