பாலுக்கு புதிய விலை கோரும் பால் உற்பத்தியாளர்கள்!
ஒரு லிட்டர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பை கோருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீழ்ச்சியடைந்துள்ள பால் உற்பத்தி
தற்போது ஒரு லிட்டர் பாலுக்காக செலுத்தப்படும் 110ரூபாய் போதுமானதாக இல்லையெனவும் சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பால் உற்பத்தி குறிப்பிட்ட அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிறிய பால்மா உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்காமை, அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய நிவாரணை உரிய வகையில் வழங்காமை உள்ளிட்ட காரணிகளால் தங்களது தொழிற்துறை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
