ஜனநாயகம் மறந்து போகும் நிலையில் விதைக்கப்படும் இராணுவ ஆட்சி - ரவிகரன்

Srilanka Covid Democracy
By Independent Writer Sep 15, 2021 06:41 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

ஜனநாயகத்தை மறந்து போகும் நிலையிலே இராணுவ ஆட்சியை படிப்படியாக விதைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக நாளான இன்று கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய தினம் சர்வதேச ஜனநாயக தினமாக குறிப்பிடப்படுகின்றது. எங்களுடைய இலங்கையை எடுத்துக்கொண்டால், அதிலும் தமிழ் மக்களை எடுத்துக்கொண்டால், இங்கே ஜனநாயகம் என்பது கேள்விக்குறியே.

ஜனநாயக ரீதியிலான ஆட்சியில், நாங்கள் இல்லை என்பது தான் உண்மை. ஜனநாயக நாடென்று கூறிக்கொண்டு, இராணுவத்தினுடைய ஆட்சி தான், படிப்படியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டில், எங்களுடைய மக்கள், சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற ஒரு நோக்கம் தான், எங்கள் அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் உதாரணத்துக்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன்.

இந்த வருடம் தை மாதம் இருபத்தியோராம் திகதியளவில் இராணுவமயமாக மாறும் இலங்கை என்ற தலைப்பில் ஜஸ்மின் சூக்காவின் அமைப்பு கருத்து வெளியிட்டிருந்தது. முப்பத்தியொன்பது இராணுவ அதிகாரிகள், ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள், சிவில் சேவை தொழில் பதவிகளை பெற்று வருவதாக அது சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக, ஒரு முக்கியமான பொறுப்பான விடயங்கள் அனைத்தையும், அதாவது கொரோனாவுக்கான நடவடிக்கை, காவல்துறை, புலனாய்வுத்துறை, சிறைகள், வெளிநாட்டு கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படை தேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி உட்பட பல துறைகளிலும் இராணுவத்தினுடைய ஆட்சியை இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தமட்டிலே, மகாவலி எல் வலயம் என்று சொன்னால், தமிழர்களுடைய காணிகளை பறித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற ஒரு நடவடிக்கை அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு திணைக்களம் என்று எண்ணக்கூடிய அளவிலே, எங்களுடைய மக்கள் இருக்கின்றார்கள்.அப்படியாக நடக்கின்றது

எங்களுடைய பகுதியிலே. அப்படியாக இருக்கையில் ஜனநாயகம் என்பது, இங்கு கேள்விக்குறியாகவும், ஜனநாயக ரீதியாக, ஒரு மலர்கின்ற, அதாவது, சந்தோஷமாக இருக்கின்ற நிலையில் நாங்கள் இல்லை.

எங்களுடைய தமிழர்களுடைய நிலங்கள் பறிப்போகின்றன, தமிழர்களுடைய நீரேரிகள், ஆறுகள் பறிபோகின்றன. தமிழர்களுடைய குளங்களை ஆக்கிரமிப்பு செய்து முன்னைய அரசர்கள் குளங்களை கட்டிவித்தார்கள் ஆனால் இப்போது இலங்கை அரசாங்கத்தினுடைய படை கட்டுமான பணிக்காக அந்த குளங்களை ஆக்கிரமிப்பு செய்து குளங்களை மூடி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பல குளங்களை மூடி இராணுவ கட்டமைப்போ அல்லது விமானப்படை கட்டமைப்போ, உருவாக்கப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன.

இப்படியாக கடல் ஆக்கிரமிப்பு, கடலில் எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலைமையில், அத்துமீறிய நடவடிக்கைகள் பெரும்பான்மை இன மக்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதை படைத்தரப்பு ஆதரவாக பார்த்துக்கொண்டு, ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படியான நிலைமைதான், எங்களுடைய மக்களுக்கு இங்கே காணப்படுகின்றது.

இந்த வகையிலே தமிழர்களுடைய மத அடையாளங்கள் கூட ஆக்கிரமிக்கப்படுகின்றது. இன்றைய இலங்கையை பொறுத்தமட்டிலே, அடக்குமுறை ஆட்சி, அதிகார திணிப்பு, பாரபட்ச அனுமதிகள், அத்துமீறிய நடவடிக்கைகள், பௌத்த மத திணிப்பு இப்படியாக ஆக்கிரமிப்பின் உச்சம் என தமிழினத்தின் மீதும், தமிழர்களுடைய நிலங்களின் மீதும், தமிழர்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், பாய்கின்ற கொடுமைகள் ஏராளம்.

இந்த ஜனநாயகம் என்பதையே, எங்களுடைய மக்கள் மறந்து போகும் நிலைமைக்கு இந்த அரசு கொண்டு வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, இராணுவ ஆட்சியை படிப்படியாக இந்த ஜனநாயகத்தை மறந்து போகும் நிலையிலே இராணுவ ஆட்சியை படிப்படியாக விதைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US