பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை!முன்னாள் போராளிகளை தேடிச்செல்லும் இராணுவ புலனாய்வாளர்கள்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Fuel Crisis
By Shan Jul 07, 2022 07:12 PM GMT
Report

முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும் பணிகளில் இலங்கை இராணுவப்புலனாய்வாளர்கள் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

அதனையடுத்து இவ்வாறு சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகளை புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களது குடும்ப விபரங்கள் என்பன சேகரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக முன்னாள் போராளிகளை அவர்களது குடும்பத்தினருடன் இலங்கை அரசாங்கம் இணைத்தது.

முன்னாள் போராளிகளிடம் தொடர்ந்தும் விசாரணை

இதனை தொடர்ந்து பல மாதங்கள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இராணுவ புலனாய்வாளர்களால் அடிக்கடி விசாரணைகளுக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள், எரிவாயு, பால்மா உட்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத அளவிற்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில், வன்னி பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு பல கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை தற்போது மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளிகள் அதிருப்தி

அந்த வகையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு இலங்கை அரசால் குடும்பங்களோடு சேர்த்து வைக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அண்மைக்காலங்களாக செல்லும் இராணுவப் புலனாய்வாளர்கள், முன்னாள் போராளிகள் பயன்படுத்தும் சமூக வலைத்தள கணக்குகளின் விபரங்கள், கடவுச்சீட்டு விபரங்கள், வங்கி கணக்குகள் விபரங்கள் உட்பட்ட தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து வருவதாகவும் முன்னாள் போராளிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இம்மாதத்தில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,புலனாய்வாளர்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US