மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் எதிரொலி! இரவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை..
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளிலும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.
இன்றைய தினம்(28) எரிபொருளுக்கான பெற்றோலும் அதிகரித்துள்ள பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவும் எரிபொருள் வழங்கும் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கிவருவதையும் காணமுடிகின்றது.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு படையெடுக்கின்றனர்.









இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam