ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுத்த மைக்ரோசொஃப்ட்
எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு மாற்றாக ரீம்ஸ் (teams ) செயலியை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாளொன்றுக்கு 36 மில்லியன் பயனர்கள்
2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப் காணொளி அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant Messaging), கோப்பு பகிர்வு மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான அழைப்புக்கள் போன்ற வசதிகளை வழங்கியது.
2011ஆம் ஆண்டு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஸ்கைப் சேவையைக் கொள்வனவு செய்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட மைக்ரோசொஃப்ட் அறிக்கையின் படி, நாளொன்றுக்கு 36 மில்லியன் பயனர்கள் ஸ்கைப் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மைக்ரோசொஃப்ட் , தனது ரீம்ஸ் (Teams) செயலியை அதிக முன்னிலையில் கொண்டு வந்து குழு சந்திப்புகள், கோப்பு பகிர்வு, அலுவலக பணிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையமாக உருவாக்கியுள்ளது.
மைக்ரோசொஃப்ட் நிறுவனம்
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரீம்ஸ் (Teams) செயலியை, மாதம் 320 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு , ரீம்ஸ் (Teams) பயனர்கள் ஸ்கைப் பயனர்களுடன் உரையாடவும், அழைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ,ஸ்கைப் சேவை 2025 ஆம் ஆண்டு மே மாதம் 5 திகதி முதல் பயன்படுத்த முடியாது எனவும்,அதற்குப் பதிலாக டீம்ஸ் (Teams) செயலியை பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 19 மணி நேரம் முன்

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri
