பிரித்தானியர்களுக்கு உயிராபத்து - ஆட்டோ புயல் தொடர்பில் வானிலை மையம் எச்சரிக்கை
பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஓட்டோ புயல் காரணமாக பிரித்தானியாவில் பலத்த காற்று மற்றும் அதிக மழை காணப்படும். ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதிகள் சில மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் 75 மைல் வேகத்திற்கு அதிகமாக காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளது.
மேலும்,சில இடங்களில் மின்சாரமும், சில இடங்களில் மொபைல் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் சாலை, ரயில் மற்றும் படகுப் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

High Voltage Tracks கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் TRPயில் மாஸ் காட்டியது எது... டாப் 5 விவரம் இதோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
