மறைந்த சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் தம்பித்துரை முத்துக்குமாரசாமியின் நினைவேந்தல் நிகழ்வு
ஈழ விடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மரணமான தம்பித்துரை முத்துக்குமாரசாமியின் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(24.1.2026) மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது, வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
மலரஞ்சலி
அத்துடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் எட்டு மாவட்டங்களினால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,கோவிந்தன் கருணாகரம்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.




ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam