இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயர் மறைவு நினைவாக இரங்கல் திருப்பலி
இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயரும்,யாழ்.மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயருமான பேரருட்.தந்தை ஜெறோம் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் 53 வது மறைவு நினைவாக ஜூலை 17 வடக்கில் கத்தோலிக்க தேவாலயங்களில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறை மாவட்டம் யாழ் மறை மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது 1950 முதல் 1972 வரையான 22 வருடங்கள் ஆயராக பணியாற்றினார்.
திடீர் சுகயீனம்
ஊர்காவற்றுறை கரம்பன் கிராமத்தை சேர்ந்த ஆயர் எமிலியானுஸ்பிள்ளை யாழ்.ஆயர் இல்ல குருமுதல்வர்,கத்தோலிக்க பாடசாலைகளின் முகாமையாளர் போன்ற பதவிகளையும் வகித்தார்.
ஏழு ஐரோப்பிய ஆயர்கள் யாழ்.மறை மாவட்டத்தை நிர்வகித்த பின் எட்டாவது ஆயராக பாப்பரசரால் இவர் நியமிக்கப்பட்டார்.
1972 ஜூலை மாதத்தில் திடீர் சுகயீனத்தால் கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.
இறுதிச்சடங்கு
ஆயரின் உடல் விமான மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது.
இறுதிச்சடங்கில் அமைச்சர்கள் செ.குமாரசூரியர்,கே.பி.இரத்தினாயக்கா,ஆர்.எஸ்.பெரேரா,பிரதம நீதியரசர் எச்.என்.சி பெர்னாண்டோ உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சிலி செலுத்தினர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



