ரணிலுடன் இணையும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் : செய்திகளி்ன் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கமைய, கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera), பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga), மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage), பந்துல குணவர்தன(Bandula Gunawardane), பிரமித பண்டார தென்னகோன் (Premitha Bandara Tennakoon) உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சி வேறுபாடின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இந்தக் குழுவினருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல்நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |