சம்பள பணத்தை நன்கொடையாக வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இந்த மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரை தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆறு மாத சம்பளத்தை அனுப்பி வைக்குமாறு கோரி விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடை குறித்து விஜயதாச ராஜபக்ச லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரியவுக்கும் அறிவித்துள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri