சுமந்திரன், சாணக்கியன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளனர்.
கனேடிய நாடாளுமன்றத்தில் இன்று இவ்விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ சுமந்திரனும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஓர் கலந்துரையாடலுக்காக கனேடிய நாடாளுமன்றம் சென்று இருந்தோம்.
அதன்போது அங்கு 15 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம்.
மற்றும் எமது மக்களுக்குப் பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம் அத்துடன் கனேடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam