கடற்தொழிலாளரின் சர்ச்சைக்குரிய கருத்து! வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய பிரதிநிதிகள்
இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் கருத்தாக அமையாது என்று வட மாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்கள்.
சர்ச்சைக்குரிய கருத்து
இதன்போது அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்தொழிலாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இக்கருத்து பல்வேறு தரப்பினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இக்கருத்து தொடர்பில் இன்று யாழில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் கருத்தாக அமையாது என்றுசுட்டிக்காட்டப்பட்டதுடன் இதனை யாழில் உள்ள இந்திய துணை தூதுவராலயத்திற்கு சென்று தெளிவு படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வடக்கு மாகாண கடற்தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகத்துக்கு சென்று தமது வருத்ததிணை தெரிவித்தனர்.
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி
சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் எப்படி இருக்கிறார்..! வெளிவந்துள்ள புதிய தகவல்
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam