ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் மற்றும் சவூதி நிதியத்தின் பிரதிநிதி இடையே சந்திப்பு(Photos)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஸாத் மற்றும் இலங்கைக்குப் பொறுப்பாக இருக்கின்ற பொறியியலாளர் அல் மஸூத் ஆகியோரை இன்று (29) சந்தித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இதன் போது நாட்டின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாகவும், நாட்டின் அபிவிருத்திக்கு சவூதி அபிவிருத்தி நிதியம் மூலம் உதவ உள்ளதாகவும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்ததாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) , திருகோணம
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் சவூதி அபிவிருத்தி
நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஸாத், தேசிய நீர்
வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஸாந்த ரனதுங்க, பொது முகாமையாளர்,
பொறியியலாளர் மஸூத், பிரதி மத்திய வங்கி ஆளுனர் மற்றும் ஏனைய அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.




