சஜித் நோர்வேத் தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு (photos)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையாருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு இன்று (21.10.2022) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் குறிப்பாக இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு நோர்வேத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பது, மக்கள் நல மேம்பாட்டு முன்னெடுப்புகளான
மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்ட முன்வருகைகளுக்காகத் தமது
பாராட்டுக்களையும் நோர்வேத் தூதுவர் இதன்போது தெரிவித்தார் என்று
எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.