எரிசக்தி அமைச்சருக்கும் மின்சாரசபையின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் இருந்து கூட்டு தேசிய சுதந்திர ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் நீக்கப்பட்டதை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து எரிசக்தி அமைச்சருக்கும், சபையின் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இதன்போது, கூட்டு தேசிய சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் சமிந்த கமகே, அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டு கலந்துரையாடலில் இருந்து, வெளியேற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதுவே பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. தான் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தபோதே தாக்கப்பட்டு கலந்துரையாடலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



