இலகுவில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மருந்துகளை வாங்குவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெடி சர்ச்
புதிய மொபைல் போன் அப்ளிகேஷனுக்கு "மெடி சர்ச்" என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் தகவல்களை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மொபைல் போன் அப்ளிகேஷன் முறை அறிமுகப்படுத்தப்பட்டமை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.