மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(21.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க சென்றபோது, உயிரிழந்துள்ளார்.

விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்த நிலையில், விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரிவிக்கப்படசLேசேது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam