யாழில் தென்னைகளை தாக்கும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெண் ஈ தாக்கத்தை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டமானது நேற்று (04.04.2024) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
உயிரியல் முறை கட்டுப்பாடு
அந்த வகையில் குறித்த செயற்திட்டம் கோண்டாவில் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட விலக்கியல் துறை பேராசிரியர் ஆர்.ஞானேஸ்வரன், வடக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் B.பாலகெளரி, யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஆர்.ராஜேஸ்கண்ணா, தென்னை பயிர் செய்கை சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்