மிக முக்கியஸ்தரின் 'B' அணியாக மேயர் மணிவண்ணன்! - சட்டத்தரணி சுகாஸ் அடுக்கும் ஆதாரங்கள்
மிக முக்கியஸ்தரின் 'B' அணியாக யாழ்.மாநகர சபையின் மேயர் மணிவண்ணன் செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த காலத்தில் ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பு செய்ததாக மேயர் மணிவண்ணன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த ஊடக சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
மேயர் மணிவண்ணனின் அண்மைய கருத்துக்கள் வேடிக்கையானவை.அவரின் கருத்துக்கள் அரசியல் தொடர்பான அரிச்சுவடி கூட தெரியாத ஒருவரின் கருத்தாகவே பார்க்கப்படும்.
மணிவண்ணனை மேயர் ஆக்கியது ராஜபக்சக்களே தவிர தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் ராஜபக்சர்களின் நிகழ்ச்சி நிரலில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,