யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டி
யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
தமிழ் தேசியக் கட்சி இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னம் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை.
அது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போது தேர்தலின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் போட்டியிடுகின்றார்.
முன்னாள் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஆசிரியர் திலீபன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
