நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம்..! அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம் தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு
இம்முறை, தேசிய மக்கள் சக்தி கட்சி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்த தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்ட மே தின ஊர்வலம் தற்போது இடம்பெற்றுள்ளது.
இந்தக் ஊர்வலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதரவாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வடக்கு, கிழக்கு என பிரிவிணை பாராது ஒருமித்து செயற்படுவோம் என அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மேதினம் இன்று(01.05.2026) கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரை ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
அதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு. இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடிப்பேம் என கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு மே தினம் மட்டும் அல்ல, மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக போராடுகின்ற நாளாகும், இந்த மாவட்டத்தில் மேடையில் நிற்கின்ற நாங்கள் மட்டுமல்ல தமிழ், சிங்கள, முஸ்லீம் என்று இல்லாது ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம் 2024 ம் ஆண்டு இந்த நாட்டை பெறுப்பேற்ற போது இந்த நாடு எங்கே இருந்தது?
கடனில் இருந்தது, அந்த கடனை செலுத்த முடியாது இருந்தோம், வீதியில் வரிசையில் காத்திருந்தனர், விவசாயிகளுக்கு பசளையின்றி இருந்தனர், நெல்லுக்கு விலை இருக்க வில்லை, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை, மலைநாட்டு தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை என மக்களின் பிரச்சினைகளை பட்டியல் படுத்தியுள்ளார்.

மேலதிக தகவல் - பவண்







விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri