ஒரு வாக்காளர் சார்பில் செலவு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் ஒருவர் செய்யக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 74 ரூபாவிலிருந்து 160 ருபாய் வரை ஒரு வாக்காளருக்கு செலவிட முடியும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சித் தொகுதிகளிலும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் அதிக தொகை
உதாரணமாக, குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ள மன்னார் உள்ளூராட்சித் தொகுதியில் வேட்பாளர் ஒருவருக்கு 74 ரூபாயை வாக்காளர் செலவிட முடியும்.
மேலும், அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ள அம்பாறை லாஹுகல உள்ளூராட்சித் தொகுதியில் 160 ரூபாயை ஒரு வாக்காளருக்கு செலவிட வேட்பாளர்களுக்கு அனுமதி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
