உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் உச்சபட்ச பயன்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் அபிவிருத்திப் பணிகளில் பயனுறும் வகையில் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் திணைக்கள உதவி ஆணையாளர் சூரியகுமார் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - சேருநுவர பிரதேச சபையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் சனசமூக மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் இடம்பெற்ற ஒருங்கிணைந்த செயலமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்தல், கிராமிய பெண்களுக்கு கிராமிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி அல்லது சமூக அபிவிருத்திக்கான மானியங்களை வழங்கல் மற்றும் கிராமிய மக்களுக்கான நிவாரணம் புனர்வாழ்வு உள்ளிட்ட பல சேவைகளை உள்ளுராட்சி மன்றங்களினால் ஆற்ற முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நிதி அனுசரைண
ஆசிய மன்றத்தின் நிதி அனுசரனையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் நடைமுறைப்படுத்தலோடு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பிரதேசங்கள் தோறும் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
சேருநுவர நகர மண்டபத்தில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் சேருநுவர பிரதேச சபையின் அதிகாரிகளும் அலுவலர்களும் அந்த பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |