மாவையின் புகழுடலுக்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் அஞ்சலி! அநுர இன்று செல்லலாம்

Jaffna Mavai Senathirajah ITAK
By Theepan Jan 30, 2025 11:56 AM GMT
Report

ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  வருகைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அநுரகுமார திஸாநாயக்க இன்று இரவு மாவையின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (30) காலை மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாவையின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

மாவையின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

பலரும் அஞ்சலி 

அத்தோடு மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் முக்கியஸ்தர்களும் மாவையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஷ்வரன் மற்றும் அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனக சபாபதி உள்ளிட்டோர் மாவையின் புகழுடலுக்கு தமிழரசுக் கட்சியின் கொடியைப் போர்த்தி அஞ்சலித்தனர்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார். 

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார்.

மாவையின் புகழுடலுக்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் அஞ்சலி! அநுர இன்று செல்லலாம் | Mavai Senathirajah Funeral Public Consumption  

சி.வி.கே.சிவஞானம்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சி.வி.கே.சிவஞானம்,

“தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளியே மாவை சேனாதிராஜா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்

"மாவை சேனாதிராஜாவின் இழப்பு என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்துக்குமான இழப்பாகும்.

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளியே மாவை சேனாதிராஜா.

தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்க்கையில் பல தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒருவரே அவர்.

கட்சியைக் கட்டி வளர்ப்பதில் எல்லோரையும் அந்நியோன்யமாக அரவணைத்து சென்ற ஒருவரே அவர்’’ என்றார்.

டக்ளஸ் தேவானந்தா

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

''தானே தேர்ந்தெடுத்த தனது அரசியல் வழியில் இறுதி வரை உறுதியுடன் இருந்தவர்.

ஆரம்ப காலச்சூழலில் அரச நெருக்கடிகளை அடுத்தடுத்து சந்தித்தவர். இளமைக்காலத்தில் சிறைகளில் அடைபட்டு இன்னல்களை எதிர்கொண்டவர்.

சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தனது வழிமுறையில் குரல் எழுப்பியவர். ஆளுமையும் அர்ப்பணிப்பும் மிக்க மாவை அண்ணை பாரம்பரிய தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஆழமாக நேசிக்கப்பட்டவர்.

எல்லோர் கனவுகளும் வெல்லும் காலம் பிறக்க உழைப்போம். இழப்பின் துயரில் வதைபடும் குடும்பத்தவர்கள்,.

கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சகலருக்கும் ஆழ்மன ஆறுதல்" என குறிப்பிடப்பட்டுள்ளது

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

சித்தார்த்தன் 

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் மறைவுக்கான அவரது இரங்கல் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

“தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சுவரை, தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும், நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தீவிரம் பெற்ற, எம் இனத்திற்கு எதிரான திட்டமிடப்பட்ட இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாக அன்றைய தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த போது மிகத் தீவிரமாக செயற்பட்டவர்களில் மாவை அண்ணரும் ஒருவராவார்.

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரனுடனும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவருடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்ததோடு நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் உதவிகளையும் செய்திருந்ததோடு, அவர்கள் பிரிந்த பின்பும் இருவருடனும் தனித்தனியாகவும் தொடர்புகளை வைத்திருந்தார்.

அதேநேரத்தில், தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அரசியல் போராட்டங்களிலும் தந்தை செல்வாவும், அண்ணர் அமிர்தலிங்கமும் மிகவும் நம்பிக்கைக்குரியவாராக தொண்டனாக தொடர்ச்சியாக பங்குபற்றியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பத்துத் தடவைகளுக்கு மேற் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக அரச படைகளின் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்திருந்தார்.

இன்று அவர் சந்திக்கும் வலிதான உடல் உபாதைகளுக்கு அன்று அவர் அனுபவித்த சித்திரவதைகளும் ஒரு காரணமாகும்” என்றுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் புகழுடலை பொறுப்பேற்ற சிறீதரன்

மாவை சேனாதிராஜாவின் புகழுடலை பொறுப்பேற்ற சிறீதரன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US