மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா(Live)
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ சிவனம்பாள், ஸ்ரீ முத்துமாரியம்பாள்,முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகளுக்கு வெளி வீதி உலாவாக பஞ்சரத பவனி நடைபெறுகின்றது.
இன்று (24.02.2024) காலை தேர்த்திருவிழாவும், 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீ முத்துமாரியம்மனின் பூரண அனுக்கிரகத்தை பெற்றுக்கொள்ள பக்தர்கள் அடியார்கள் ஆலயத்திற்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர்.