தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள் - சினிமா பாணியில் பாரிய கொள்ளை
தென்னிலங்கையில் வெளிநாட்டவர்கள் இருவர், சினிமா பாணியில் மேற்கொள்ள பாரிய கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலி, களுவெல்ல பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு தங்க பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி வந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இருவரும் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 28 தங்க நகைகளை மோசடியான முறையில் திருடிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா பாணியில் கொள்ளை
வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கடந்த 24ஆம் திகதி மதியம் முச்சக்கர வண்டியில் இரண்டு சிறிய பைகளுடன் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.
ஒரு பையில் போலி தங்க நகைகள் காணப்பட்டுள்ளனர். மற்றொரு பை வெறுமையாக காணப்பட்டுள்ளது. இருவரும் நகைக் கடையில் உள்ள மேசையில் இரு பைகளையும் வைத்துவிட்டு நகைக்கடை உரிமையாளரிடம் தங்க நகைகளின் விலை குறித்து பேசியுள்ளனர்.
நகைகளை பரிசோதித்துவிட்டு சிறிது நேரம் கழித்து 28 தங்க நெக்லஸ்களை வாங்கிக் கொள்வதாக நகைக் கடையின் உரிமையாளரிடம் வெளிநாட்டவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
போலி தங்க நெக்லஸால் ஏமாற்றம்
கொள்வனவு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்த 28 தங்க நெக்லஸ்களை வெளிநாட்டைச் சேர்ந்த இருவரும் தமது வெற்று பையில் வைத்துள்ளனர்.
எனினும் நகைகளில் கரட் அளவை சரிபா்க்க வேண்டும் என நகை கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அவர்கள் கடைக்கு கொண்டுவந்த போலி நெக்லஸ்களை மேசை மீது வைத்துவிட்டு கடையில் இருந்த நகைகளை சாதுர்யமாக எடுத்து சென்றுள்ளனர்.
பையை சோதனையிட்ட போதே அது தங்களுடைய கடைக்கு சொந்தமானது அல்ல எனவும் அது போலியாதெனவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் இருவரில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
