5 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ: மயிரிழையில் உயிர் தப்பிய நபர்
குருநாகல் - சதுரஷ மாவத்தையில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் (20.06.2023) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் நபர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குருநாகல் மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் பௌசர்கள் மற்றும் மத்திய அதிவேக வீதியின் தீயணைப்பு வாகனமொன்றும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
கடும் முயற்சியின் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவும் சந்தர்ப்பத்தில் 3ஆம் மாடியில் ஒருவர் சிக்கியிருந்ததுடன் அங்கிருந்தவர்களின் முயற்சியில் அவர் கீழே குவிக்கப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர் தப்பியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக குருணாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan