பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு : பெரும் நிதி இழப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Financial crisis
By Aanadhi Jun 22, 2022 08:22 AM GMT
Report

கமத்தொழில் அமைச்சில் பணியாற்றும் வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பான பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த ஆண்டு (2021) நிதியொதுக்கப்பட்ட, 'உள்ளடக்கிய இணைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் - (Inclusive Cconectivity and Development Project -ICDP) ' அல்லது 'ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் மேம்பாட்டுத் திட்டம்' எனப்படும் செயற்திட்டம் இழக்கப்பட்டுள்ளது.

பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு : பெரும் நிதி இழப்பு | Massive Financial Loss Of A Female High Official

82 மில்லியன் டொலர் இழப்பு

விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதி திட்டங்களில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவரின் அசமந்த போக்கு காரணமாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தினை இலங்கை விவசாயிகள் இழந்துள்ளனர்.

இந்த திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பூர்த்தி செய்ய பெண் அதிகாரி தவறியதால், விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை குறைந்த வருமானம் பெறும் விவசாய சமூகம் இழக்கும் வகையில் குறித்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு : பெரும் நிதி இழப்பு | Massive Financial Loss Of A Female High Official

அதே போன்று ஒன்றரை லட்சம் ரூபாய் மாத சம்பளம் பெறும் இன்னொரு அதிகாரியின் அசமந்த போக்கு காரணமாக, மற்றொரு 82 மில்லியன் டொலர் திட்டம் இழக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விவசாய அமைச்சகத்தின் வெளிநாட்டு நிதி திட்ட பிரிவின் கீழ் வரும் 82 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமான 'Small Holder Agri Business and Resilience Project (SARP)' இன்னும் செயற்படாமல் உள்ளதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு : பெரும் நிதி இழப்பு | Massive Financial Loss Of A Female High Official

இந்த திட்டம் செயற்படாத போதிலும் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பணிப்பாளர் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான சம்பளம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் உட்பட இதர வசதிகளை பெற்றுக்கொள்வதாகவும், இத்திட்டத்தை செயற்படுத்துமாறு அமைச்சு அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி கொள்வனவு செய்ய விரைவில் வரிசையில் காத்திருக்க நேரிடும்: அருண சாந்த ஹெட்டியாரச்சி

பிரதிநிதிகள் கோரிக்கை 

கடந்த வருடம் நாட்டில் விவசாயத்துறைக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலையிலும் இவ்வாறான பெறுமதி மிக்க திட்டங்கள் இழக்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சிடம் நாட்டிலுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண் உயர் அதிகாரியொருவரின் அசமந்த போக்கு : பெரும் நிதி இழப்பு | Massive Financial Loss Of A Female High Official

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US