ஒரு தசாப்தத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு பாரிய நெருக்கடி! யார் காரணம்?
இனிவரும் தசாப்தங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளங்களையும் தமிழர்கள் தொலைக்க கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்ன தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்களுடைய வரலாறுகளை தொலைத்து விட்டால் எங்களுடைய அத்திவாரங்களை இழந்து விடுவோம்.இவை ஈழத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தளத்திலும் தமிழ் சமூகத்தின் இருப்பு நீண்ட கால கேள்வி குறியாகும்.
எனவே ,தமிழினத்தை நகர்த்திய ஒரு மேய்ப்பன் கூறியது போன்று தற்போதைய காலக்கட்டத்தில் பாதைகளை தேடாமல் பாதைகளை உருவாக்க வேண்டும்.பாதைகளை உருவாக்குபவர்களாக இளைய சமூகம் மாற வேண்டும்.
எனவே இதற்கு கணிசமாக பங்களிப்பு எமது இளம் தறைமுறைகளுக்கு, இளைய சமூகத்திற்கு உண்டு.எனவே எமது வரலாறுகளை எமது இளம் சமூகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் அவை தமிழ் சமூகத்திற்கு சவாலாக அமைந்துவிடும்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாயக தரப்புக்கள் 28 துறைகளை உருவாக்கிய ஒரு நீள அரசியலை கொண்டவர்களாவர்.அதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை முதன்மைப்படுத்தப்பட்ட விடயமாகும்.
இருப்பினும் வெறுமனே அரசியல் சார்ந்த விடயங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.இதற்கு காரணம் குறித்த இனம் சார்ந்த ஒரு சரியான மேய்ப்பனை உருவாக்கவில்லையென்பதே ஆகும்.இனியும் அவ்வாறான ஒரு மேய்ப்பனை அடையாளம் காண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.