சுவிற்சர்லாந்து மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி
சுவிற்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் ஏற்படவுள்ள மின்சாரத்தடை காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான மின்சார ஒப்பந்தத்தில் தொழிநுட்ப அளவிலாவது ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனின் குளிர்காலத்தில் மின்சார விநியோகத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட விநியோகப் பாதுகாப்பு குறித்த வெளிப்புற அறிக்கையின் முடிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 3 சூழ்நிலைகளின் விளைவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.அவை வருமாறு,
1- ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை முற்றிலுமாக கைவிடுதல்.
2-அண்டை நாடுகளுடன் குறைந்தபட்சம் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை எடுப்பது.
3- ஐரோப்பிய ஒன்றியத்துடன் மின்சார ஒப்பந்தம் செய்தல்.
அறிக்கையின்படி, ஒத்துழைப்பை முற்றிலுமான கைவிடும் சூழ்நிலையில், மார்ச் மாதத்திற்குள் நிலைமை மிகவும் சிக்கலானதாக இருக்கும். உள்நாட்டு மின்சார தேவை இனி 47 மணி நேரத்திற்கு கூட உத்தரவாதம் அளிக்க முடியாது.அதிலும் ஒரு தீவிரமான சூழ்நிலையாக மாறினால், மின்சார விநியோகம் 500 மணிநேரம் வரை தடைபடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அண்டைய நாடுகளில் டிரான்ஸ்மிஷன் கிரிட் ஆபரேட்டர்களுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஏற்படுத்திக்கொண்டால், சூழ்நிலையை "நிச்சயமாக நிர்வகிக்க முடியும்" என்றும் கூறப்படுகின்றது.
அதுவே, சுவிற்சர்லாந்தை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக கருதும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான மின்சார ஒப்பந்தத்தை மேற்கொள்வது என்பதே பாதுகாப்பான முடிவாக இருக்குமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
40-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சுவிஸ் மற்றும் ஐரோப்பிய டிரான்ஸ்மிஷன் கட்டங்களை சுவிஸ் எல்லைகளுடன் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.