மட்டக்களப்பில் தியாகிகள் தின நினைவேந்தல்
மட்டக்களப்பில் ஈ.பி,ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் பத்மநாபாவின் 36 ஆவது தியாகிகள் தினம் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(20.6.2026) கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, திருவுருவப் படத்திற்கு சுடர் எற்றி மலர் தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல்
யூன் 19 ஆம்திகதி தியாகிகள் தினத்தையிட்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் இன்று வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றும் கட்சியின்; உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.