வெளிநாட்டுப் பயணத் தடையைத் தளர்த்துமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை
தன்மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் ஊடாக ஊழல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்காலிக அனுமதி
குறித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துவதற்கு உத்தரவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுஷ நாணயக்கார மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த மனுவின் மீதான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று கொழும்பு பிரதம ஆணையாளர் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் நடைபெற்றது.

சந்தேக நபரான முன்னாள் அமைச்சருக்காக முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரர் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இக்கோரிக்கை தொடர்பான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை எதிர்வரும் 2ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
அந்நாளில் இரு தரப்பினரின் வாதங்களையும் நீதிமன்றம் கேட்டறிந்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan