இடை நிறுத்தப்பட்ட பாரத் - லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம்

Mano Ganeshan Ranil Wickremesinghe India
By Sajithra Jul 21, 2024 03:20 PM GMT
Report

இந்திய வீடமைப்புத் திட்டம் இடை நின்றமைக்கு, வீடுகள் கட்டப்பட வேண்டிய உரிய காணிகளை இலங்கை தரப்பு விடுவிக்காமையே காரணம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் பற்றி தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், "சந்தோஷ் ஜா, 'ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்ற உறுதி மொழியுடன், சுமார் 375 மில்லியன் ரூபா செலவில், 1,300 வீடுகளை கட்டுவதற்காக, பாரத் - லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் என்ற பெயரில், கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

யாழில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

யாழில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

விசேட கலந்துரையாடல் 

இருப்பினும், இந்த நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடை நின்றமை அல்லது மிக பெரும் தாமதங்களை எதிர் கொண்டுள்ளமைக்கு, வீடுகள் கட்டப்பட வேண்டிய உரிய காணிகளை இலங்கை தரப்பு, இன்னமும் விடுவிக்காமையே காரணம். இந்த விவகாரத்தில், இந்திய தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை' என்றார். 

இடை நிறுத்தப்பட்ட பாரத் - லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் | Manoganeshan Speech On Indian Housing Project

இதன்போது, தமிழ் முற்போக்கு கூட்டணி பங்குபெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும். கடந்த 2015 - 2019 நல்லாட்சியில் நடைபெற்றதை போன்று, தாமதங்களை களைந்து ஒட்டு மொத்த 10,000 வீடமைப்பு பணிகளையும் நாம் செய்து முடிப்போம் என நாம் இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் உறுதி கூறினோம்.

மலையக பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை தொடர்பில் இன்று நிலவும் உதாசீன போக்கை நாம் முடிவுக்கு கொண்டு வருவோம்.

200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலனி அரசு கட்டிய லயன் வீடுகளை கிராமங்கள் என்று சொல்ல முயலும் முயற்சியை, எமது காணி உரிமையை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாக நாம் பார்ப்பதற்கு காணி உரிமை தொடர்பில் இன்றைய அரசின் உதாசீன போக்கே காரணம் எனவும் நாம் இந்திய தூதரிடம் எடுத்து கூறினோம்.

இலங்கையில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது குறைவு: கிழக்கு ஆளுநர்

இலங்கையில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது குறைவு: கிழக்கு ஆளுநர்

ஜனாதிபதிக்கு தெரிவிப்பு 

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, லயன் வீடுகள் கிராமங்கள் என்ற யோசனைக்கு, நாம் வழங்கிய ஆறு அம்ச மாற்று யோசனை ஆவணத்தையும் நாம் இந்திய தரப்புக்கு வழங்கினோம்.

இடை நிறுத்தப்பட்ட பாரத் - லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் | Manoganeshan Speech On Indian Housing Project

நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு மேலதிகமாக, இந்திய அரசு பின்வரும் உதவிகளை மலையக மக்களின் நலன் கருதி வழங்க உள்ளதாக எமக்கு இந்திய தூதர் சந்தோஷ் ஜா எடுத்து கூறினார்.

1. விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில் நுட்ப கல்வி, கணிதம் ஆகிய துறை சார் ஆசிரியர் பயிற்சி

2. மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள், பாடசாலை பைகள் வழங்கல்

3. தோட்ட தொழிலாளர் வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான விளக்குகள்

4. ஸ்மார்ட் வகுப்பறைகள்

5. பாடசாலை பௌதிக கட்டுமானங்கள்

6. தொண்டமான தொழில் நுட்ப நிலையத்தை தரம் உயர்த்தும் உதவிகள் இவை அனைத்தும் நமது மக்கள் நலன் கருதி இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள்.

ஆகவே, இவற்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நன்றிகளை தெரிவித்து கொண்டு, அதேவேளை இவற்றை அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பாரபட்சம் இன்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் படி இந்திய அரசை நாம் கோரினோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US