மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்: வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

Mannar Sri Lanka SL Protest
By Thileepan Aug 11, 2025 11:00 PM GMT
Report

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக் கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில்  நேற்றையதினம்(11) குறித்த போராட்டம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை

சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை

காற்றின் வலு

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த திட்டங்களை நிறுத்த வேண்டும். இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது.

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்: வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Mannar Wind Project Protest Vavuniya

இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு. ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது.

மன்னாரில் பதற்றம்! மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸார்

மன்னாரில் பதற்றம்! மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸார்

காற்றாலை

காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றி வெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்: வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Mannar Wind Project Protest Vavuniya

காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப் பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

 முதலீடு

அதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன. எனவே மன்னாரில் நடைபெற இருக்கின்ற இந்த அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது.

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்: வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Mannar Wind Project Protest Vavuniya

இந்த காற்றாலை மற்றும் கனிய அகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றி பல் தேசிய கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்தனர்.

வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், அரசியல் தரப்பினர், சமூக செயற்ப்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US