மன்னார் மாவட்டத்துக்கான துறைமுகம் பேசாலையில்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mannar Government Of Sri Lanka Sri Lankan Peoples Ramalingam Chandrasekar
By Thevanthan Jun 25, 2025 02:20 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைக்கப்படவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24.06.2025) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 

"கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவிடம் கூறியுள்ள முக்கிய தகவல்கள்

தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவிடம் கூறியுள்ள முக்கிய தகவல்கள்

பிரச்சினைகளுக்கு தீர்வு 

மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

மன்னார் மாவட்டத்துக்கான துறைமுகம் பேசாலையில்.. அமைச்சர் வெளியிட்ட தகவல் | Mannar Port In Pesalai Minister Chandrasekar

அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்தியகடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

எதிர்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது." என குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில் கடற்றொழிலாளர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மன்னார், பேசாலையில் 2026இல் கடற்றொழில் துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்." என்றார். 

டக்ளசுடன் சேர்ந்த சி.வி.கே மற்றும் பலருக்கு செம்மணியில் நேரடியாக விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

டக்ளசுடன் சேர்ந்த சி.வி.கே மற்றும் பலருக்கு செம்மணியில் நேரடியாக விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை! இலங்கை எரிபொருள் விநியோகம் பாதிப்படையுமா..

ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை! இலங்கை எரிபொருள் விநியோகம் பாதிப்படையுமா..

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US