மன்னாரில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல் (PHOTOS)
மன்னாரில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும்,மக்கள் மயப்படுத்தப்படுவதற்காகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பதில் உதவி தேர்தல் ஆணையாளர் கந்தையா நிமலரூபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா,தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க,ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க ,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடல்
இதன்போது மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் முன்வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.




களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan