மங்களவிடமிருந்து மனோவிற்கு சென்ற இரகசிய செய்தி - இறப்பிற்கு பின் அம்பலமாகும் விடயம்

Political Mangala Samaraweera Mano Ganesan
By Mayuri Aug 24, 2021 03:40 PM GMT
Report

“வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு! 2007இல் நாடாளுமன்றத்தில் அரசு பக்கமிருந்து எதிரணி பக்கம் நீங்கள் வந்த போது நான் அனுப்பிய இக்குறிப்பு ஞாபகமிருக்கின்றதா? மீண்டும் சந்திக்கும் வரை கண்ணீருடன் விடை பெறு நண்பா” என மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் மிக உருக்கமான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2005 - 2009 வரை, கொழும்பில் அடைக்கலம் புகுந்திருந்த வடக்கு, கிழக்கு தமிழர்கள், அதிகாரமிக்க வெள்ளை வேன் கடத்தல் பயங்கரவாத கும்பலினால் “முனிசிபலிட்டி நாய்களை” பிடிப்பதை போல, பிடித்து, கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பற்றைகளில் சடலங்களாக வீசப்பட்டு கொண்டிருந்த காலம்.

அதன்போது, கொழும்பு எம்பியாக நான் “வருவது வரட்டும்” என போராடிக்கொண்டிருந்த வேளை, மங்கள சமரவீர எனக்கு இரகசியமாக செய்தி அனுப்பினார்.

மங்கள சமரவீர ஊடக அமைச்சராக இருந்த வேளை, “தானும், ஸ்ரீபதி சூரியராச்சியும் அரசில் இருந்து விலக உள்ளதாகவும், அதுபற்றி தான் ஜனாதிபதிக்கு எழுதும் கடிதத்தில், மனித உரிமை மீறல் வெள்ளை வேன் கடத்தலையும் ஒரு காரணமாக கூற உள்ளதாகவும், அது பற்றிய விபரங்களை தர முடியுமா?” என கேட்டிருந்தார்.

மங்கள சமரவீரவின் இந்த இரகசிய செய்தி, கொலைக்கார சூழலில், கடத்தல்கார கடலில் தத்தளித்து, ஒரு சிறு துரும்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு படு உற்சாகத்தை தந்தது. அவருக்கு தகவல்களை அனுப்பினேன்.

மங்கள சமரவீர சொன்னதைபோல், அரசில் இருந்து விலகும் தீர்மான காரணங்களை ஜனாதிபதிக்கு தெரிவித்த கடிதத்தில் வெள்ளை வேன் கடத்தல் மனிதவுரிமை மீறல் என்பதையும் காரணமாக கூறி இருந்தார்.

பின்னர் 2007 ஜூன் 15 திகதியன்று நாடாளுமன்றத்தில் அரசு பக்கம் இருந்து எதிரணி பக்கம் அவர் வந்து அமர்ந்தார். அவர் வரப்போவதை அறிந்த நான் சில நிமிடங்களுக்கு முன், “வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு”! என்று என் கையால் எழுதிய சிறு குறிப்பை அவருக்கு அனுப்பினேன்.

அதை வாசித்து என்னை பார்த்து மங்கள சமரவீர கையை காட்டி, சிரித்தது இன்னமும் என் கண்களில் நிழலாடுகிறது. மங்கள சமரவீர கட்சி மாறியது, எதிரணியில் இருந்து, பதவி, பவிசு வேண்டி, அதிகாரம் உள்ள ஆளும்கட்சிக்கு அல்ல என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்று “தேசபக்த” யுத்தம் என்று, போர் நடந்துக்கொண்டிருந்த வேளையில், யுத்த களத்துக்கு வெளியேயும் தமிழர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், பல தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதே அரசில் அமைச்சர்களாக இருந்த வேளையில், ஏனைய பல எதிரணி தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை விட்டு ஓடிப்போக வேண்டிய நிலைமை ஏற்பட்ட வேளையில்தான், அரசில் இருந்து மங்கள தன் நண்பன் ஸ்ரீபதி சூரியராச்சியுடன் தைரியமாக பதவி விலகினார்.

அதனால் தான் எம் பக்கத்தை நோக்கிய, மங்கள சமரவீரவின் வருகை எனக்கு அன்று பெரும் உற்சாகத்தை தந்தது. மங்கள சமரவீர கடைசி வரை இந்நாட்டை பல்லின, பன்மத, பன்மொழி நாடாகவே கருதினார்.

இந்த எண்ணம், நாட்டின் அதிகாரபூர்வ கொள்கையாக மாற வேண்டும் என்பதே அவரது அவா. ஆகவே அவரது எதிர்பாரா மறைவுக்கு முந்தைய அவரது வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைந்து அவரது ஆத்மா சாந்தியடைய, “நாம் அனைவரும் இலங்கையர், இந்நாடு ஒரு பன்மைத்துவ நாடு” என்ற கொள்கையை நிஜமாக்க நாம் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US