புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு (Video)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் - வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குழந்தையேசு கோவில் பத்திமாதா சந்தி பகுதியில் இன்று (21.04.2023) நண்பகல் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் சரணடைவு
கோப்பாபிலவு பகுதியில் இருந்து வந்த கன்டர் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியில் பயணித்தவரை மோதித்தள்ளியுள்ளது. விபத்திற்குள்ளான உந்துருளி தீ பற்றி எரிந்துள்ளது.
காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குக் காரணமான கன்டர் வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்து
தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
