சட்டவிரோதமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான ஷாட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.பத்தும் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் நிலக்கடலை பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.
பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam